ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி! காரணம் இதுதான்!

0
168

ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து அற்புதமான வெற்றியை பெற்றிருக்கின்றது இந்திய கிரிக்கெட் அணி.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றி இருக்கின்றது. அதனை அடுத்து டெஸ்ட் தொடர் நடந்து வருகின்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமான ஆட்டத்தால் தோற்றுப்போனது இந்திய அணி கேப்டன் விராட் கோலி நாடு திரும்பி விட்டார். ரஹானே தலைமையிலான இந்திய அணி மிக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டை வீச தீர்மானித்தது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி எல்லா விக்கெட்டுகளை பறிகொடுத்து 195 ரன்களை மட்டுமே சேர்த்தது. பும்ப்ரா 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள் அறிமுக பந்து வீச்சாளர் சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் 326 ரன்கள் சேர்த்திருந்தார்கள். கேப்டன் ரஹானே 112 ரன்கள் தனி ஒரு ஆளாக சேர்த்தார். ஆல் ரவுண்டர் ஜடேஜா 57 ரன்களை சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் லயன் மிட்செல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் 200 ரன்களை சேர்த்தார்கள். கிரீன் 45 ரன்களும் வேட் 40 ரன்களும் எடுத்திருக்கிறார்கள் .இந்திய அணி சார்பாக சிராஜ் 3 விக்கெட்டுகள் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்கள் .

இதனைத் தொடர்ந்து எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி வீரர்கள் பயணித்தார்கள் இந்தமுறையும் அகர்வால் சொதப்பி விட்டார். 5 ரன்களுடன் ஆட்டம் இழுந்துவிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 3 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். சுப்னம்கில் 35 ரன்களும், ரஹானே 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் எழுதுவது பெண்களை சேர்த்து இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள்.

இந்த வெற்றிக்கு முழு காரணமும் கேப்டன் ரஹானே தான் என்று சொல்லலாம். கேப்டன் ரஹானே தான் பொறுப்புணர்வை உணர்ந்து சவாலான தன்னுடைய பணியை எந்த குறையும் இல்லாமல் செய்து வருகின்றார். குறிப்பாக சிராஜ் மற்றும் அஸ்வினை சூழலுக்கு ஏற்ப பந்துவீச வியூகம் அமைத்ததை தெரிவிக்கலாம். அதேசமயம் நடுவர்களின் தவறான தீர்ப்புகளுக்கு எதிராக கோபத்துடன் குரல் கொடுக்கவும் தயங்கவில்லை ரஹானே.

அதோடு அவர் அடித்த சதம் தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இல்லை என்றால் ஆஸ்திரேலிய அணியை போலவே இந்திய அணியும் ரன் எடுப்பதில் சொதப்பி இருக்கும். கேப்டன் ரஹானே அசத்தலான வெற்றியை இந்திய அணிக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா 1.1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து வருகின்றன.

Previous articleரஜினியின் முடிவை வரவேற்ற சீமான்! திரையுலக பயணம் தொடர வாழ்த்து!
Next articleஆட்சியில் பங்கு கேட்கும் விசிக! உடைகிறதா திமுக கூட்டணி? கலக்கத்தில் அறிவாலயம்