சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணியின் இடம்?? ஐசிசி வெளியிட்ட தகவல்!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டும் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அதிரடியாக களமிறங்கிய இந்திய அணி 1-0 கைப்பற்றியது.
இதன் முதலாவது ஆட்டத்தில் மாபெரும் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. எனவே, இரண்டாவது ஆட்டத்திலும் வெற்றி பெரும் தருவாயில் இந்திய அணி இருந்தது.
ஆனால் இதற்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி இறுதி நாள் ஆட்டம் நடைபெறும் சமயத்தில் அப்பகுதியில் மழை பெய்ததால் போட்டி தடை பட்டது.
இந்த இந்திய அணி – வெஸ்ட் இண்டீசிற்கான தொடர் முடிவடைந்ததும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளி பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது.
அப்பட்டியலில் இரண்டு போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வெற்றியை பதிவு செய்து மற்றொன்று டிரா ஆனதால் இந்திய அணி இதில் 66.67% பெற்று இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது.
பாகிஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று நூறு சதவிகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும், இந்த புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 54.17 சதவிகிதம் பெற்று மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து 29.17 சதவிகிதம் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
மேலும், ஐந்தாவது இடத்தில் 16.67 சதவிகிதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஆறாவது இடத்தில் பூஜ்ஜியம் சதவிகிதத்துடன் இலங்கையும் உள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள புள்ளி பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தற்போது வெறும் 12.2 ஓவர்களில் நூறு ரன்கள் குவித்து வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.