முதல்முறையாக பகலிரவு டெஸ்டில் இந்திய அணி!

Photo of author

By Sakthi

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் மாதம் 16ஆம் தேதி ஆரம்பமாகிறது இந்த ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடத்தப்பட இருக்கிறது. இதன் வழியாக இந்திய பெண்கள் அணி முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் கால்பதிக்க இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மிதாலிராஜ் தலைமையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் 3 ஒருநாள் போட்டி அத்துடன் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் சந்திக்கும் டெஸ்ட் போட்டி கிறிஸ்டலில் ஜூன் மாதம் 16ஆம் தேதி ஆரம்பமாகிறது 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய பெண்கள் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இதனையடுத்து இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று விளையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

https://twitter.com/safee_1524/status/1395299001415593984?s=20

 

அதன்படி செப்டம்பர் 19, 20, 24, ஆகிய தேதிகளில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதன் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வரையில் உலகத்தில் அதிக வேகம் உடைய ஆடு களமான பெர்த்தில் நடைபெற இருக்கிறது. இது பகல் இரவு ஆட்டமாக நடத்தப்பட இருக்கிறது. இதன் மூலமாக இந்திய பெண்கள் அணி முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கால்பதிக்க இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய நாட்டில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கின்ற இந்திய பெண்கள் அணி இதுவரையில் ஆஸ்திரேலியாவை டெஸ்டில் வெற்றி கொண்டது இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி அதில் நான்கு போட்டிகளில் தோல்வியும், ஐந்தில் டிராவும், ஆகியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தன்னுடைய வலைதள பக்கத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட்டை நாங்கள் முன்னெடுத்துச் செல்கின்றோம். இந்திய பெண்கள் அணி வருடத்தின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பின் டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். என்று சொல்லியிருக்கிறார்.

டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. அக்டோபர் மாதம் 7ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி அதோடு 11ஆம் தேதி ஆகிய தேதிகளில் இந்த டி20 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஆட்டங்கள் ஆனது நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.