உக்ரைன் ரஷ்யா போர் உக்ரைனில் சிக்கியிருக்கும் 20 இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

Photo of author

By Sakthi

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையில் 20 நாட்களை கடந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது.

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இருந்து வரும் ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா திடீரென்று போர் தொடுத்தது.

ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலால் உக்ரைன் உருக்குலைந்து போனது என்று தான் சொல்ல வேண்டும் பல கட்டிடங்கள் சேதமடைந்தன, ராணுவ நிலைகள் முற்றிலுமாக உருக்குலைந்து போனது.

அதோடு உக்ரைனின் பல முக்கிய நகரங்களை விசைப்படகில் கைப்பற்றி இருக்கின்றன மேலும் உக்ரேனின் தலைநகரை நோக்கி ரஷ்யப் படைகள் விரைந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு நடுவில் உக்ரைன் நாட்டிலிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது அதன்படி ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் அங்கே சிக்கியிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

உக்ரைனின் வான் எல்லைகள் மூடப்பட்டதால் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி, உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய விமானங்களை அனுப்பி வைத்து உக்ரைனிலிருந்து இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், உக்ரைனிலிருந்து இதுவரையில் 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆபரேஷன் கங்கா திட்டம் தொடர்ந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவிக்கும்போது, 3 நாட்களுக்கு முன்பு வரை சுமார் 50 இந்தியர்கள் உக்ரைனிலிருப்பதாக தெரியவந்தது.

அதில் 15 முதல் 20 பேர் வரையில் நாடு திரும்ப விருப்பம் கொண்டிருந்தார்கள் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம் மற்றவர்கள் தற்போது வெளியேற விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார்.