Home National சட்டசபை உறுப்பினரை கரம்பிடித்த நாட்டின் இளம் வயது பெண் மேயர்!

சட்டசபை உறுப்பினரை கரம்பிடித்த நாட்டின் இளம் வயது பெண் மேயர்!

0
சட்டசபை உறுப்பினரை கரம்பிடித்த நாட்டின் இளம் வயது பெண் மேயர்!

கேரள மாநிலத்தில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தான் இந்தியாவின் இளம் மேயர் என சொல்லப்படுகிறது.

இவருக்கும் கோழிக்கோடு பாலசேரி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டசபை உறுப்பினர் சச்சின் தேவ் என்பவருக்கும், கடந்த 5 மாதத்திற்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மேலும் சச்சின் கேரள சட்டசபையின் இளம் வயது சட்டசபை உறுப்பினராவார் இவர்களுடைய திருமணம் அந்த கட்சியின் தலைமை அலுவலகமான திருவனந்தபுரத்தில் உள்ள ஏ கே ஜி சென்டரில் நடைபெற்றது.

இந்த திருமணத்தை முதலமைச்சர் பெனராயி விஜயன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். திருமண விழாவில் கேரள அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும், பங்கேற்றுக் கொண்டார்கள்.

அதோடு திருவனந்தபுரத்திற்கு வருகை தருபவர்கள் பரிசு பொருட்களை தவிர்ப்பதுடன் பரிசு பொருட்களுக்கான தொகையை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குமாறு மணமக்கள் இருவரும் கேட்டுக் கொண்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.