TVK DMK: நடிகர் விஜய் அரசியலில் குதித்ததிலிருந்தே களத்திற்கு வராமல், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துகளையும், விமர்சனங்களையும் கூறி வந்தார். இதனால் அவர் work from home என்ற விமர்சனத்துக்கும் ஆளாக்கப்பட்டார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்களை சந்திக்க மாநாட்டையும், பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
தவெக சார்பில் நடைபெற்ற இரண்டு மாநாடுகளையும், திருச்சியில் இன்று காலை நடைபெற்ற பிரச்சாரத்தையும் குறிவைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் “கொள்கையில்லாத கூட்டம் என்றும், புதிய எதிரிகள்” என்றும் தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக சாடியுள்ளார். தவெக மாநாட்டில் விஜய் அவர்கள் முதலமைச்சரை “அங்கிள்” என்றும், தனது அரசியல் எதிரி திமுக தான் என்றும் நேரடியாக கூறியிருந்தார்.
இந்நிலையில் ஸ்டாலின் மறைமுகமாக பேசி இருப்பது அவருக்கு விஜய்யின் மேல் இருக்கும் பயத்தை காட்டுகிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. கரூரில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் விழா தொடர்பாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் மற்றக் கூட்டத்தை போல் இல்லாமல், நம் கூட்டம் முடிந்து நாம் திரும்பும் போது கொள்கை பட்டாளமாக தான் திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்று திருச்சியில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் நிறைய அத்துமீறல் நடந்ததை சுட்டிக்காட்டும் விதமாக இது உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் விஜய் ஸ்டாலின்-யை கடுமையான முறையில் விமர்சித்த போதும் கூட அவர் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாதது, தவெக-வின் மேல் இருக்கும் பயத்தை கட்டுவதாக பலரும் கூறி வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் மறைமுக பேச்சு உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.