காற்று மாசுபாடு பட்டியலில் இந்தோனேசியாவின் ஜகார்தா முதலிடம்!! டெல்லிக்கு எத்தனையாவது இடம்?

0
110

 

காற்று மாசுபாடு பட்டியலில் இந்தோனேசியாவின் ஜகார்தா முதலிடம்… டெல்லிக்கு எத்தனையாவது இடம்…

 

உலகத்தில் காற்று மாசபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தா அதிக காற்று மாசுபாடு உள்ள நகரமாக முதலிடத்தை பிடித்துள்ளது.

 

சுவிட்சர்லாந்து நாட்டை தலைமை இடமாகக் கொண்ட ஐக்யூ ஏர் என்ற காற்று மாசுபாட்டு ஆய்வு மையம் உலகத்தில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள டாப் 10 நகரங்களை பற்றி ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் உலகத்தில் அதிகம் காற்று மாசுபாடு உள்ள நகரங்களின் டாப் பத்து நகரங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

 

ஐக்யூ ஏர் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் அதிக காற்று மாசுபாடு உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்தா முதலிடத்தை பிடித்துள்ளது.

 

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தா நகரத்தில் வசிப்பவர்களின் குழந்தைகள் அதிகளவு காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜகார்தா நகரில் வசிக்கும் குழந்தைகள் காற்று மாசுபாடு காரணமாக மூச்சுத் திணறல், வயிற்று போக்கு, சுவாசக் கோளாறு போன்ற நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

 

காற்று மாசுபாடு ஜகார்தா நாட்டில் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் தற்பொழுது உள்ள நிலை தொடர்ந்தாலும் 2050ம் ஆண்டுக்குள் ஜகார்தா நகரம் வாழத் தகுதி இல்லாத நகரமாக மாறிவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஜாகர்தா நாட்டில் காற்று மாசபடுவதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் கூறப்படுகின்றது. அதாவது அந்நகரத்தில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, அந்நகரத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேறு நச்சுக் காற்று ஆகியவை காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

 

தற்பொழுது ஐக்யூ ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் ஜகார்தா 157 என்ற காற்று மாசுபாட்டு குறியீட்டுடன் முதலிடத்தில் உள்ளது. ஷாங்காய் நகரம் 156 என்ற காற்று மாசுபாட்டு குறியீட்டுடன் இரண்டாவது இடத்திலும், வூஹான் நகரம் 134 என்ற காற்று மாசுபாட்டு குறியீட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

 

இந்தியா நாட்டில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடமான தலைநகர் டெல்லி அந்த பட்டியலில் 105 என்ற காற்று மாசுபாட்டு குறியீட்டுடன் 7வது இடத்திலும் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி 95 என்ற காற்று மாசுபாட்டு குறியீட்டுடன் டெல்லிக்கு அடுத்தபடியாக அதாவது எட்டாவது இடத்திலும் உள்ளது.

 

ஐக்யூ ஏர் நிறுவனம் வெளியிட்டு உலகத்தில் அதிக காற்று மாசுபாடு உள்ள நகரங்களின் பட்டியல்…

 

01. ஜகார்தா – 157

02. ஷாங்காய் – 156

03. வூஹான் – 134

04. இன்ஜியான் – 126

05. சாண்டியாகோ – 125

06. குவைத் – 124

07. டெல்லி – 105

08. கராச்சி – 95

09. தோகா – 92

10. போஸ்னியா – 91

 

Previous articleகேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்… வலியுறுத்திய பா.ஜ.க!!
Next articleபுதிய அவதாரத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்… மீண்டும் மீண்டுமா முடியலப்பா!!