10 ஆயிரமாக குறைந்தது ஒரு நாள் நோய் தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை!

Photo of author

By Sakthi

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. அதோடு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.34 லட்சமாக இருக்கிறது. இது கடந்த 523 தினங்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்றைய தினம் நோய்த்தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விற்கக்கூடிய அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டு இருக்கிறது.

இதன் மூலமாக  நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் சீக்கிரம் 98.64 சதவீதமாகவும், பலியானவர்களின் சதவீதம் 1.35 சதவீதமாகவும், இருக்கின்றது. அதோடு தற்சமயம் 0.39 சதவீதம் நபர்கள் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

நாட்டில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அடிப்படையில் 112.34 கோடி  தவணைகள் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதில் நேற்று மட்டும் 30 லட்சத்து 20 ஆயிரத்து 119 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.