மக்கள் நீதி மய்யம் தலைவருக்கு ஏற்பட்ட தொற்று! மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்!
பிரபல நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவராக இருப்பவர் கமலஹாசன். இவர் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். முடிந்த 4 சீசன்களையும் அவர் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது ஐந்தாவது சீசனான இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பயணத்தை முடித்தவுடன் நேரடியாக அவர் பிக்பாஸ் நிகழ்விற்கு தான் சென்றார். வாராவாரம் நடக்கும் போட்டிகள் குறித்து வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் இவர் என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து போட்டியாளர்களுடன் சுவாரசியமாக பேசுவதாலேயே பலர் அந்த நாட்களில் தவறாமல் நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர்.
வாரத்தின் இறுதி நாட்களில் அவர் அங்கு செல்வது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் அமெரிக்க பயணம் முடிந்து நேராக அங்கு வந்ததாகத்தான் அவர் மேடையில் கூறினார். மேலும் அவருக்கு லேசான இருமல் மற்றும் அதற்கான அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
மேலும் இன்னும் உலகமெங்கிலும் கொரோனா நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.