நோய்தொற்று தாக்கம் எதிரொலி! ஜனவரியில் அதிகரித்த பணவீக்கம்!

Photo of author

By Sakthi

நோய் தொற்றால் உலக நாடுகள் பலவற்றில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றிருக்கிறது.
இந்த நோய் தொற்றுக்கு காரணமாக, இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடும் கோபத்திலிருக்கின்றன.

இந்த நோய் தொற்றால் ஆரம்பத்தில் சீனா தடுமாறினாலும் தற்சமயம் அந்த நாட்டில் நோய்த்தொற்று அறவே இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தன்னுடைய பொருளாதார வீழ்ச்சியை சரி செய்து கொண்ட அந்த நாடு தற்சமயம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.

ஆனாலும் உலக நாடுகளில் இன்னும் நோய்த்தொற்று பரவல் முடிவுக்கு வரவில்லை. ஆனால் இந்தியாவில் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக, இந்த நோய்த்தொற்று குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது.

இந்த நிலையில், சென்ற ஜனவரி மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 6.01 சதவீதமாக உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சில உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது தான் இதற்கு முக்கிய காரணமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 4.0 6% ஆகவே இருந்ததாக சொல்லப்படுகிறது.

உணவுப் பொருள் பணவீக்கம் 4.5 சதவீதத்திலிருந்து 5.43 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.