தமிழக மக்களே உஷார்!! வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல்!! முக கவசம் அணிய அறிவுறுத்தல்!!

Photo of author

By Sakthi

Viral fever: தமிழகத்தில் குளிர் காலம் தொடங்கிய உள்ள நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும்  வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக 75% க்கு அதிக மாணவர்கள் இன்புளூயன்சா என்ற வைரஸ் தொற்று காரணமாக இருக்கிறது.

இந்த இன்புளூயன்சா வைரஸ் ஏ வைரஸ் மற்றும் பி வைரஸ் என இரு பிரிவுகள் உள்ளது என மருத்துவ ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த இரண்டு வைரஸ் பாதிப்புகளுக்கும் வெவ்வேறு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.   இந்த வைரஸ் காய்ச்சலுக்கு அறிகுறியாக இரும்பல் , உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாத காலமாக நீடித்து இருந்தால் அது இன்புளூயன்சா என்ற வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம்.

மேலும் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் இந்த  காய் கட்டுப்படுத்த முதல் நடவடிக்கையாக அனைவரும்  முக கவசம் அணிய மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.மேலும் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த காய்ச்சல் குணப்படுத்தும் சிகிச்சை முறைகளை எளிமையாகக் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பொது மக்கள் இந்த நோய் பரவலில் இருந்து பாதுகாத்து கொள்ள அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறது.