கேப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த தகவல்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு…!

Photo of author

By Sakthi

கேப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த தகவல்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு…!

Sakthi

Updated on:

கேப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த தகவல்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு…

 

நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

வாத்தி திரைப்படத்திற்கா பிறகு நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

பிரபல தெலுங்கு நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், எட்வர்ட் சொனென் பிலிக், ஜான் கோக்கென் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

ஜிவி பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

 

இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் ஜூலை 28ம் தேதி அதாவது நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.