படையப்பா படத்தில் நடிக்க ஆசைப்பட்ட தளபதி..! ஆனாலும் நிறைவேறிய கனவு..!

Photo of author

By Priya

Minsara Kanna Movie: தமிழ் சினிமாவில் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமாக்களின் வரிசையில் ஒரு படம் உள்ளது என்றால் அது படையப்பா தான். மீண்டும் படையப்பா போன்ற ஒரு திரைப்படத்தை தமிழ் சினிமாவில் எடுக்க முடியுமா? என்பது போல் இருக்கும் படையப்பா திரைப்படம். சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் நடித்த இந்த திரைப்படம் அப்போதைய நாளில் அதிக வசூல் செய்த திரைப்படத்தில் ஒன்றாக உள்ளது. எனினும் சிலர் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் கில்லி என்று கூறினாலும், படையப்பா தான் அதிக வசூல் செய்ததாக ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், செளந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், அனுமோகன், ராதா ரவி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் பல அவ்வப்போது நமக்கு கிடைத்து தான் வருகின்றன. அந்த வகையில் தளபதி விஜய் நடிகர் ரஜினிக்காந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆனால் அதில் நடிக்க முடியாமல் போயிட்டதாகவும், அதே ஆண்டு இயக்குநர்  கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் (Director k.s.Ravikumar) நடிகர் விஜய் நடித்து செப்டம்பர் மாதம் வெளிவந்த படம் தான் மின்சார கண்ணா. இந்த படத்திற்கும், பெயருக்கும் ஒரு சம்மதம் உண்டு. அந்த ஆண்டில் வெளியான படையப்பா படத்தில் வெளியான மின்சார கண்ணா பாடலின் முதல் வரிதான் தளபதி விஜய் நடித்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இதனை சென்டிமென்டாக வைத்தாலும், நடிகர் விஜய் படையப்பா படத்தில் நடிக்காமல் போனதால் அவருக்காகவும் இதனை செய்துள்ளார் என்று தகவல் கூறப்பட்டது.

இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா வெளியான அதே ஆண்டில் மின்சார கண்ணா திரைப்படமும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் படிக்க: அயன் படத்தில் சூர்யா இந்த கெட்டப்பில் வருவதற்கு இந்த நடிகை தான் காரணமா?