Ponvandu in Tamil: நம்மை சுற்றி எவ்வளவோ ஜீவராசிகள் வாழ்ந்து வருகிறது. இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் ஆச்சரியங்கள் நிறைந்ததாக உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்புகளை கொண்டதாக வாழ்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் இந்த பொன்வண்டு. பொன்வண்டு கிராமத்து பிள்ளைகளால் அறியப்பட்ட ஒரு பூச்சியினம்.
இந்த பொன்வண்டு 80ஸ் மற்றும் 90ஸ்களின் பொக்கிஷம் என்று தான் கூறவேண்டும். முன்பெல்லாம் கோடைக்கால தொடக்கங்களில் இந்த பொன்வண்டின் வரவு கிராமப்புறங்களில் அதிகமாக இருக்கும். இந்த பொண்வண்டை பிடிப்பதற்காக விடுமுறையில் இருக்கும் பிள்ளைகள் வயல்வெளியில் இருக்கும் காெண்னை மரத்தை தேடி ஓடுவது எல்லாம் நியாபகமே.
ஆனால் தற்போது இந்த பொன்வண்டை கிராமப்புறங்களில் கூட காண முடியவில்லை காரணம் என்னவாக இருக்கும். மேலும் இந்த பொன்வண்டு பற்றிய சுவராஸ்ய தகவல்களை பற்றி காண்போம்.
தங்கத்திற்கு இணையான பொன்வண்டு
பொன்வண்டு தங்கத்திற்கு ஈடான வண்டாக பார்க்கப்படுகிறது. தங்கம் இயற்கையாக பூமியின் அடியில் உருவாகும். இதை வெட்டி எடுத்து தான் ஆபரணங்கள் போன்றவை நாம் செய்கிறோம். அந்த வகையில் பொன்வண்டு முட்டைகளை மரத்தில் இருந்து இடுகிறது. அவ்வாறு மரத்தில் இருந்து முட்டைகளை இட்டாலும் கீழே விழுந்து உடையாது. அது மண்ணில் புதைந்து எத்தனை நாட்கள் கழித்தாலும், அது பாெறிக்கும் நேரத்தில் மண்ணிலிருந்து வெளிவரும். அதனால் தான் அதனை தங்கத்திற்கு இணையாக பார்க்கிறார்கள்.
தற்போது அழிந்து வரும் இனமாக பார்க்கப்படுகிறது இந்த பொன்வண்டு. அதற்கு காரணம் இந்த பொன்வண்டு குறிப்பிட்ட மரத்தில் மட்டும் தான் வாழும். செங்கொன்றை மரம் எனப்படும் மரத்தில் இது வாழும். இதன் இலைகளை தான் உணவாக உட்கொள்ளும். தற்போது இந்த மரங்கள் அரிதாக காணப்படுவாதால் பொன்வண்டு இனம் இல்லை என்றும், மேலும் மற்ற வண்டு இனம் போல் குறைந்த நாட்களில் இவை குஞ்சிகளை பொறிப்பது கிடையாது.
பொன்வண்டு குஞ்சிகள் பொறிப்பதற்கு கிட்டத்தட்ட 1 வருடங்கள் ஆகும். எனவே இதனால் கூட இவைகள் அழிவின் விளிம்பில் இருக்கலாம் என தெரிய வருகிறது.
இந்த பொன்வண்டு முட்டை பார்ப்பதற்கு இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. தரையில் கீழே போட்டால் குதிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. அவ்வளவு எளிதில் உடையாது.
பொன்வண்டு பார்பதற்கு பளபளப்பாக இருக்கும். இதன் கழுத்தில் கை வைத்தால் அவ்வளவு தான். கைகளை வெட்டி விடும். ஆனால் இது மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த பொன்வண்டில் 15க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
இதில் ஆண், பெண் என்று இருவகைகள் உள்ளன. இந்த வண்டு பார்தீர்கள் என்றால் இதனை பிடித்து வீட்டில் வளர்க்கலாம் என ஆசை கொள்வது தவறு. ஏனெனில் வீட்டில் வளர்க்கப்படும் வண்டாக இருந்தாலும், அது இயற்கை சூழலுடன் வாழும் போது தான் உயிருடன் இருக்கும்.
மேலும் படிக்க: சிறுநீரக பிரச்சனையா கவலையை விடுங்க..!! சிறுநீரக கல்லை கரைக்க இந்த ஒரு கீரை போதும்..!!