நிதிநிலை அறிக்கை தொடர்பாக பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

0
135

இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை 1860 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் 1947ஆம் வருடம் நவம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் முறையாக அப்போதைய நிதியமைச்சர் சண்முக செட்டியாரால் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2020 ஆம் வருடம் ஆற்றப்பட்ட நிதிநிலை உரைதான் வரலாற்றில் மிக நீளமானது அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணிநேரம் 42 நிமிடங்களுக்கு உரையாற்றினார் என்று சொல்லப்படுகிறது.

1991 ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது அந்த நிதி நிலை அறிக்கையில் 18650 வார்த்தைகள் இருந்தனர். இதுதான் அதிக வார்த்தைகள் கொண்ட நிதிநிலை அறிக்கை என்று சொல்லப்படுகிறது. 1977 ஆம் வருடத்தில் அப்போதைய நிதியமைச்சர் ஹுரூபாய் முல்ஜுபாய் பட்டேல் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வெறும் 800 வார்த்தைகள் மட்டுமே இருந்தனர், அதுதான் மிகவும் சிறிய நிதிநிலை அறிக்கை என்று சொல்லப்பட்டது.

நாட்டில் அதிக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தவர் மொரார்ஜி தேசாய் அவர் 10 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் அடுத்தபடியாக பா சிதம்பரம் 9 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கிறார். நோய் தொற்று காலகட்டம் என்பதால் சென்ற வருடம் முதல் டிஜிட்டல் முறையிலும் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது.

92 வருடங்களாக பொது நிதிநிலை தனியாகவும், ரயில்வே நிதிநிலை தனியாகவும், தாக்கல் செய்யப்பட்டு வந்தது 2017 ஆம் வருடம் முதல் இரண்டு நிதிநிலை அறிக்கைகளும் ஒன்றிணைத்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

Previous articleதமிழகத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வு! படுகுஷியில் மக்கள்!
Next articleமுதல் வாரமே எலிமினேஷனுக்கு பிக்பாஸ் பிரபலங்கள்! என்ன நடக்கிறது பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில்?