மொழிப் போரின் தியாகிகள் தினத்தை முன்நிறுத்தி சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கின்ற மொழிப் போர் வீரர் அரங்கநாதன் நினைவிடத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார் அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் நோய்த்தொற்று இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. வயதானவர்களின் நோய் இருப்பவர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதன் காரணமாக, உயிர் இழப்பு உண்டாகிறது. அவர்களை பரிசோதனை செய்யும்போது அவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படுகிறது, ஆனாலும் நோய்த்தொற்று மற்றும் புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் நோய்கள் காரணமாக, ஏற்படும் இறப்பு என்பது குறைவாகத்தான் உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டின் பொங்கல் திரு நாளை கொண்டாடுவதற்காக மாநகரப் பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்றதன் காரணமாக, நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. இன்னும் 3 தினங்களில் நோய்த்தொற்று பாதிப்பின் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.
அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வந்தாலும் முதல்வரின் தீவிர நடவடிக்கையின் காரணமாக, அந்த பாதிப்பின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது என்று கூறியிருக்கிறார் சுப்பிரமணியன்.
தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்காமல் இருந்துவருகிறது. நோய்த்தொற்று பரவல் குறைந்து விட்டால் நிச்சயமாக ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சட்டசபை உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், பிரபாகர் ராஜா, காசி முத்துமாணிக்கம், உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வலி நிவாரண மையம் மற்றும் நோய் தணிப்பு பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் நேற்று ஆரம்பித்து வைத்தார்கள். அப்போது மருத்துவமனையின் தலைமை இயக்குனர் ஜெயந்தி உடனிருந்தார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகள் 150 மாணவர்கள் படிப்பதற்கான வசதி இருக்கிறது. அங்கு 100 மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் இருக்கும் 50 மாணவர்களை அந்த மருத்துவ கல்லூரியில் சேர்க்கலாம் என்ற ஆலோசனையை கூறியிருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசும் ஒப்புதல் வழங்கும் நிலையில் இருக்கிறது, இந்த கல்வி ஆண்டிலேயே மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றோம். 100 மாணவர்கள் மாநில சேர்க்கையிலும், 50 மாணவர்களின் சேர்க்கையிலும், இருப்பார்கள் என்று அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.