இந்த விபத்திற்கு மின்கசிவு தான் முக்கிய காரணம்! சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி!

Photo of author

By Sakthi

சமீபத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் என்று தீ பற்றிக்கொண்டது.இந்த சம்பவம் குறித்து நேரில் வந்து ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,

தீயணைப்புத் துறையின் சார்பாக மருத்துவமனைகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது எதிர்பாராத விதமான மின்கசிவு காரணமாக, ஏற்பட்ட தீ விபத்து விபத்து ஏற்பட்ட உடனேயே உயிர் சேதத்தை தவிர்க்க ஊழியர்கள் உடனடியாக நோயாளிகளை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

எல்லோரையும் தூக்கிக் கொண்டே வெளியே சென்று இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் சுப்ரமணியன்.

மருத்துவமனை கட்டிடங்கள் அனைத்தும் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறது, இதுவரையில் 3 தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் உட்பட 33 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு அங்குள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வெளியே மீட்டெடுத்திருக்கிறார்கள்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்.

இதனைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கும்போது, தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தவுடன் எவ்வளவு சேதம் என்பது தெரியவரும்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை, 5 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.