BJP: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் மக்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கின்றதோ அதன்படி அனைவரும் செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளது.
துணை முதல்வரின் நண்பர்களான ஆகாஷ் மற்றும் ரித்திஷ் ஆகியோரை விசாரித்தால் உண்மை வெளியே வரும் என அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் ஏன் பயந்து வெளிநாட்டிற்கு அவர்கள் செல்ல வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். மோடிக்கும் அமலாக்கதுறைக்கும் பயப்பட மாட்டோமென துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ள நிலையில், 2011 சட்டப்பேரவை தேர்தலின் பொழுது அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தான் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்தார்களா?
யார் கட்சி மாறினாலும் அமலாக்கத் துறையின் சோதனை தொடரும் எனவும் தெரிவித்தார். எங்களிடம் 4 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் தலைமை என்ன சொல்கிறதோ அதே முடிவு. அதிமுகவோடு கூட்டணியில் இருக்கிறோம், அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு கூறினால் ஆதரவு தருவோம் எனவும் தெரிவித்தார். தற்போது உள்ள திமுக ஆட்சியால் மக்களுக்கு அதிக அளவு சிரமங்கள் இருக்கின்றது. சொத்துவரி, மின்கட்டணம் உயர்த்தப்படுவதால் தொழிற்சாலைகள் நடத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மக்களுக்கு விரோதமான திமுக ஆட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும். தமிழக முதல்வர் டெல்லியில் பிரதமரை தனியாக சந்தித்து பேசி இருக்கிறார். நிதி தொடர்பாக தான் முதல்வர் பேசினாரா என்பதை அவர் விளக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி சேர்க்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது ஜாதி பெயர் வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.