அறிமுகம் செய்யப்பட்ட வலிமை சிமெண்ட்! தமிழ்நாடு கழகத்தின் சார்பாக மு. க. ஸ்டாலின்!
தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்படும் அரசு சிமெண்ட்டானது இன்று முதல் வலிமை என்று பெயரிடப்பட்டு வெளிச் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிமெண்டின் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும் என்று அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சிமெண்டின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 23 ம் தேதி தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வலிமை சிமெண்டை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்தார்.
மேலும் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் இந்த மலிவு விலை சிமெண்ட் ஒரு மூட்டை 360 ரூபாய்க்கு விற்கப்படும் என்று விலை நிர்ணயம் செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வெளி நிறுவன சிமெண்டுகள் ஒரு மூட்டை 510 க்கும் அதிகப்படியாக விற்பதால் அனைவருக்கும் உதவி புரியும் என்றும் கூறுகின்றனர். வலியதோர் உலகம் செய்வோம் எனும் கருத்தை மையமாக கொண்டு இந்த சிமெண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இந்த சிமெண்ட் குறைந்த விலையிலும், மக்கள் எதிர்பார்க்கும் நிறைந்த தரத்திலும் உருவாக்கி உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இந்த திட்டம் இன்று அரசால் அறிமுகப்படுத்தி உள்ளது. மக்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.