ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் விழுந்தது சென்னை அணி!

Photo of author

By Sakthi

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று புனேயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணிகள் சந்தித்தனர். முதலில் விளையாடிய பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக மஹிபால் லாம்ரர் 42 ரன்களை சேர்த்தார். டுப்லஸ்ஸிஸ் 38 ரன்களையும், விராட்கோலி 30 ரன்களையும் சேர்த்தனர்.

இதனைத்தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், தேவன் கான்வே, உள்ளிட்ட இருவரும் நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். ருதுராஜ் 28 ரன்களும் அதிரடியாக விளையாடிய கான்வே 56 ரன்களும் சேர்த்தனர்.

அதன் பிறகு வந்த உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடி காட்டிய மொயின் அலி 34 ரன்களை சேர்த்தார்.

இன்னொரு முனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாக, சென்னை அணி தோல்வியை நோக்கி பயணம் செய்தது.

கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில், முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பிரிட்டோரியா இரண்டாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து தீக்சனா 1 சிக்சர் உட்பட 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

அந்த வகையில் எக்ஸ்ட்ரா 4 ரன்கள் உட்பட மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர் அணியின் தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டை கைப்பற்றினார், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டை சாய்த்தார்.