ஐபிஎல் பெங்களூருவிடம் சுருண்டது பஞ்சாப்!

Photo of author

By Sakthi

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வரும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி அனைவரையும் முந்திக்கொண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்த சூழ்நிலையில், சார்ஜாவில் நேற்றைய தினம் மாலை 3 மணி அளவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நாற்பத்தி எட்டாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது இதனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் படிக்கல் உள்ளிட்டோர் களம் இறங்கினார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 25 ரன்களை எடுத்திருந்த சமயத்தில் ஆட்டம் இருந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். மிகவும் சிறப்பாக விளையாடிய மற்றொரு ஆட்டக்காரரான படிக்கல் 40 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் சிக்சர் மழை பொழிந்தார், 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் முப்பத்திமூன்று பந்துகளை சந்தித்து 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை சேர்த்தது பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பாக முகமது ஷமி ஹென்ரிக்ஸ் உள்ளிட்டோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பிறகு 165 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், உள்ளிட்டோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார்கள். அந்த அணியின் ரன்கள் 10.5 அவர்களின் தொன்னுத்தி ஒன்றாக இருந்த சமயத்தில் கே எல் ராகுல் 35 பந்தை சந்தித்த நிலையில் 39 ரன்களை எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இதனை தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

மிகவும் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் நாற்பத்தி இரண்டு பந்துகளை சந்தித்த நிலையில் 57 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். அந்த சமயத்தில் பஞ்சாப் அணி 15.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை சேர்த்திருந்தது. அதன் பின்னர் பஞ்சாப் அணியால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணி 12 ரன்கள் மட்டுமே சேர்க்கை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.