ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி!

0
130

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 38-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நேற்று மாலை நடந்தது. கல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் வைன் பிராவோ இடம்பெறவில்லை, அதற்கு பதிலாக சாம் கர்ரன் இடம்பிடித்து இருக்கின்றார். கொல்கத்தா அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

கல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி முப்பத்தி மூன்று பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார், தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 16 பந்தில் 20 ரன்கள் சேர்க்க கல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சென்னை அணியில் ஷர்துல் தாகூர், ஹாசில்வுட் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பிறகு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மிரட்டும் விதத்தில் களமிறங்கிய சென்னை அணி தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ், பிளிஸ்சிஸ் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 30 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ருத்ராஜ் இருபத்தி எட்டு பந்தில் 40 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து வந்த மோயின் அலி இருபத்தி எட்டு பந்தில் முப்பத்தி இரண்டு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார், அதன்பிறகு வருகைதந்த அம்பத்தி ராயுடு 10 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 11 ரன்னிலும், கேப்டன் தோனி ஒரு ரன்னிலும், அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக, சென்னை அணிக்கு நெருக்கடி உண்டானது.

இதன் காரணமாக, கடைசி இரண்டு ஓவரில் சென்னை அணிக்கு 26 ரன்கள் தேவையாக இருந்தது. 19-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார், இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது. மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை ஜடேஜா சிக்சருக்கு அனுப்பினார். அதோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார். இந்த ஓவரில் 21 ரன்கள் கிடைக்க சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இருபதாவது ஓவரை சுனில் நரேன் வீசினார், முதல் பந்தில் சாம் கர்ரன் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். மூன்றாவது பந்தில் சார்பில் தாக்கூர் 3 ரன்களை அடித்தார் ஐந்தாவது பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க சென்னை அணி வெற்றி பெற்றது அதோடு பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறி இருக்கிறது.

Previous articleஐபிஎல் கிரிக்கெட் போட்டி! பெங்களூரிடம் சரிந்தது மும்பை!
Next articleதடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும் தமிழக அரசு! மார்தட்டும் மா. சுப்பிரமணியன்!