ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்!

Photo of author

By Sakthi

ஐபிஎல் தொடரின் 11வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதனடிப்படையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் வெளியேறினார்.. அடுத்ததாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில், படிக்கல் 32 ரன்னில் அவுட்டானார் தொடர்ந்து களம் புகுந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஹெட்மயர் களமிறங்கி ஒத்துழைப்பு வழங்கினார் பட்லர் அரை சதமடித்து அசத்தினார்.

கடைசியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை சேர்த்தது. ஜோஸ் பட்லர் 70 ரன்னுடனும், ஹெட்மயர் 42 ரன்களுடனும், ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய விளையாடிய பெங்களூரு அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது அதிகபட்சமாக அந்த அணியின் சபாஸ் அகமது 42 ரன்கள் சேர்த்தார்.

தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 44 ரன்கள் அடித்து கடைசி வரை களத்திலிருந்தார்.இதனைத் தொடர்ந்து பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.