ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! நேருக்கு நேர் சந்திக்கும் சென்னை பஞ்சாப் அணிகள் பழிதீர்க்குமா சென்னை அணி?

Photo of author

By Sakthi

10அணிகளுக்கிடையிலான 15வது ஐபிஎல் கிரிக்கெட் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை 4 அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ஒட்டுமொத்தமாக 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிக்கட்ட போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று சொல்லப்படுகிறது. அடுத்த சுற்றை எட்டுவதற்கு குறைந்தது 8 வெற்றிகள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

வழக்கத்திற்கு மாறாக தடுமாறிக் கொண்டிருக்கும் சென்னை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி 5 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மும்பைக்கு எதிரான இதற்கு முந்தைய ஆட்டத்தில் கடைசி 4 பந்துகளில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 16 ரன்கள் விளாசி வெற்றியை தேடிக் கொடுத்தார், இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும் என்கிறார்கள்.

இந்த இரு அணிகளும் இந்த சீசனில் மோதுவது இது 2வது முறையாகும். ஏற்கனவே சந்தித்த தொடக்க லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது அதில் 180 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி சென்னை அணியை 126 ரன்னில் ஆட்டமேமிழக்கச் செய்தது.

இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் அந்த அணியினர் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேநேரம் அந்த தோல்விக்கு பழி தீர்க்க சென்னை அணியினர் தயாராக நிற்பார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என தெரிவிக்கப்படுகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த சில ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 222 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. ஆகவே இன்றைய ஆட்டத்திலும் அதிக ரன்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் இந்த இரு அணிகளும் 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றன. இதில் சென்னை அணி 15 ஆட்டங்களிலும்; பஞ்சாப் அணி 10 ஆட்டங்களிலும், வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு அறிவிக்கப்படவில்லை.

இன்று இரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.