ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் சென்ற 26 ஆம் தேதி ஆரம்பமானது நேற்று நடந்த 7வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதின.முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்களை சேர்த்தது.
இந்த சூழ்நிலையில், இந்தப் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 6 பந்துகளில் ஒரு சிக்சர் உட்பட 16 ரன்களை சேர்த்தார் என சொல்லப்படுகிறது.இதன்மூலமாக, அவர் அனைத்து விதமான டி20 போட்டிகளையும் சேர்த்து 7000 ரன்களை கடந்தார் இந்த சாதனையை படைக்கும் 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா அதிகபட்சமாக 50 ரன்களை சேர்த்தார். ஷிவம் துபே 49 ரன்களும், மொயின் அலி 35 ரன்களும், சேர்த்தார்கள்.211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டி காக் 60 ரன்கள் சேர்த்தார், கேப்டன் கே எல் ராகுல் 40 ரன்கள் சேர்த்தார் மனிஷ் பாண்டே 5 ரன்னுக்கும், தீபக் ஹூடா13 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், எவின் லூயிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 23 பந்துகளில் 55 ரன்களை சேர்த்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார். அவருக்கு துணையாக களத்திலிருந்த ஆயுஷ் படோனி 19 ரன்களை சேர்த்தார்.
இதனைத் தொடர்ந்து லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.