ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! பஞ்சாபை பழிதீர்க்க தவறிய சென்னை அணி!

Photo of author

By Sakthi

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது நேற்றைய தினம் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் களமிறங்கினார். மேலும் இறங்கிய உடனேயே அவருடைய அதிரடியை காட்ட தொடங்கினார். மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், ஷிகர் தவான் பொறுப்புடன் விளையாடியதால் அந்த அணியின் ரன் வேகம் அதிகரித்துக்கொண்டே சென்றது. பனுகா ராஜபக்சேவும் ஓரளவு சிறப்பான பங்களிப்பை வழங்கினார் அவர் 44 ரன்களை சேர்த்தார் என்று சொல்லப்படுகிறது.

பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 187 ரன்கள் சேர்த்தது ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்தார்.

இதனைத்தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உத்தப்பா உள்ளிட்டோர் முதலாவதாக களமிறங்கினார்கள். இந்த ஜோடியில் உத்தப்பா ஒரு ரன்னில் வெளியேறினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய சம்பவங்களும் ஷிவம் துபே 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 30 ரன்களில் வெளியேறினார் இதற்கிடையே தன்னுடைய அதிரடியால் ரன் ரேட்டை மிகவேகமாக பார்த்துக்கொண்டிருந்த அம்பத்தி ராயுடு தன்னுடைய அரைசதத்தை பூர்த்தி செய்து இருந்த நிலையில் 708 பெண்கள் சேர்த்திருந்தார். ஆனாலும் அவர் அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கி அதிரடி காட்டி வந்த முன்னாள் கேப்டன் தோனி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆட்ட நேர இறுதியில் கேப்டன் ஜடேஜா இருபத்தி உருவங்களும் ஒரு ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள் முடிவில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 176 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பஞ்சாப் அணியின் சார்பாக அதிகபட்சமாக மற்றும் ரிஷி தவான் 12 விக்கெட்டுகள் கைப்பற்றினார் இதன்மூலமாக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.