ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்துமா மும்பை அணி?

Photo of author

By Sakthi

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களுக்கான ஊதா நிற தொப்பி உள்ளிட்ட இரண்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களே வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 ஆட்டங்களில் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் பெற்றிருக்கிறது. கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி.

ஜோஸ் பட்லர், படிக்கல், ஹெட்மயர் ரியான் பராக் கேப்டன் சாம்சங் பேட்டிங்கிலும், ரவிச்சந்திரன் அஸ்வின், சாகல், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, உள்ளிட்டோர் பந்து வீச்சிலும், அசத்தி வருவதால் இன்றைய ஆட்டத்திலும் அவர்களுடைய கை ஓங்குவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

இந்த சூழ்நிலையில், மும்பை மைதானத்தில் இன்று இரவு நடக்கும் 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மும்பை அணியை சந்திக்கிறது. இந்த சீசனில் இன்னும் வெற்றி கணக்கை ஆரம்பிக்காத ஒரே அணி மும்பை தான்.

5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை ஆடியுள்ள 8 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், இன்றைய ஆட்டத்திலாவது வெற்றி பெறுமா? என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டங்களில் 153 ரன்கள் எடுத்திருக்கிறார் அதேபோல இஷன் கிஷன் 199 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் சரியான தொடக்கத்தை அமைத்து கொடுக்காததும், பந்து வீச்சின் பலவீனமும், மும்பை அணியை வீழ்ச்சிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற காரணத்தால், அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆகவே அந்த அணியை சார்ந்தவர்கள் முடிந்தவரையில் கவுரவமான நிலையை அடைவதற்கு கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

ஆகவே தொடக்க லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ச்சி பெற்ற மும்பை அணி இந்த ஆட்டத்தில் எழுச்சி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.