அணியின் வெற்றிக்கு வித்திட்ட இரண்டுபேர்! ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னை அணி!

0
171

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய தினம் நடந்த நாற்பத்தி நான்காவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், நேருக்கு நேர் சந்தித்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தார்.

இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் சாகா உள்ளிட்டோர் களமிறங்கி இருந்த சூழ்நிலையில். ஹாஸில்வுட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் வில்லியம்சன் 11 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதற்குப் பிறகு களம் இறங்கிய அந்த அணியின் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்கள்,. இருந்தாலும் இன்னொரு புறம் சற்றே நிலைத்து நின்று விளையாடிய தொடக்க வீரராக அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

கடைசியாக அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக அந்த அணியில் ஹாசில்வுட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இவனைத் தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் டுப்லஸஸ் உள்ளிட்டோர் களமிறங்கினார்கள். தொடக்க வீரர்கள் இரண்டு பேரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

மிகவும் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் முப்பத்தி எட்டு பந்துகளை சந்தித்து 45 ரன்களை எடுத்தார், இந்த நிலையில், ஹோல்டர் பந்துவீச்சில் தன விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக வந்த மோயின் 17 எண்ணெய் அவுட்டானார். ரஷித் கான் பந்து வீச்சில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக வந்த சுரேஷ் ரெய்னா 2 ரன்னில் வெளியேறினார், பொறுப்புடன் விளையாடிய டுபிளஸிஸ் 41 ரன்கள் எடுத்திருந்த சூழ்நிலையில், தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன்பிறகு களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றும் கேப்டன் டோனி உள்ளிட்டோர் சென்னை அணியின் வெற்றிக்கு வழி செய்தார்கள், கடைசியாக 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சென்னை அணி 139 ரன்களை சேர்த்தது.

அம்பத்தி ராயுடு 17 ரன்னிலும், கேப்டன் டோனி 14 ரன்களுடனும், களத்தில் இருந்தார்கள். இந்த வெற்றியின் மூலமாக சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது.

Previous articleஇந்த மாநிலத்தில் பட்டாசு விற்க வெடிக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு!
Next articleஎப்போது தொடங்குகிறது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள்?