ராஜஸ்தானை சரித்து ஹைதராபாத் அணி வரலாற்று வெற்றி!

Photo of author

By Sakthi

ஐபிஎல் கிரிக்கெட் 40 ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஏவின் லீவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்லால் களமிறங்கினார்கள்.

ஜெமினி மூவிஸ் 6 ரன்னில் வெளியேறிய சூழ்நிலையில் அதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் உடன் ஒன்றினைந்துமிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மிகவும் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 36 ரன்கள் எடுத்திருந்த சூழ்நிலையில், ஆட்டமிழந்தார்.

அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக ஆடி நாற்பத்தி ஒரு பந்தில் அரைசதம் கடந்தார், தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் ஹைதராபாத் அணி பந்துவீச்சை திக்குமுக்காட வைத்தார். அவர் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து சித்தார்த் பந்துவீச்சில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஹைதராபாத் அணியின் சார்பாக சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சந்தீப் சர்மா, புவனேஸ்வர் குமார், ரஷீத் கான், உள்ளிட்டோர் ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் சேர்த்தது.இதனை அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எதிர்பார்ப்பில் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் சகா உள்ளிட்டோர் களம் இறங்கினார்கள்.

11 பந்துகளை எதிர்கொண்ட சகா 18 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். ஜேசன் ராய் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை திணற வைத்தார். அதிரடியாக விளையாடிய அவர் நாற்பத்தி எட்டு பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் உட்பட 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக வருகைதந்த ரியான் பராக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், ஆனால் இன்னொரு முனையில் மிக நிதானமான தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில்லியம்சன் அரை சதம் கடந்தார்.

கடைசியில் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 167 ரன்களை குவித்து வெற்றிபெற்றது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றியை கைப்பற்றியது.

வில்லியம்சன் ஐம்பத்தி ஒரு ரன்களிலும், அபிஷேக் ஷர்மா இருபத்தி ஒரு ரன்களுடனும், களத்தில் இருந்தார்கள். ராஜஸ்தான் அணியின் சார்பாக அந்த அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான், சகரியா, மஹிபால் லூமோர், தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்த நிலையில், இன்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் நடைபெறும் 41வது லீக் ஆட்டத்தில் கல்கத்தா அணியும், டெல்லி அணியும், சந்திக்கின்றன. அதேபோல இரவு ஏழு முப்பது மணி அளவில் நடக்கும் நாற்பத்தி இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும், நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன.