ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! சாதனை படைத்த சுப்மான் கில்!

0
130
#image_title
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! சாதனை படைத்த சுப்மான் கில்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மான் கில் சதம் அடித்தார். இதையடுத்து குஜராத்  டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மான் கில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளர்.
நேற்று அதாவது மே 15ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழந்து தோல்வி பெற்றது. 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சதமடித்து குஜராத் வெற்றிக்கு 101 ரன்கள் சேர்த்தார். நேற்று அடித்த சதத்தின் மூலமாக சுப்மான் கில் அவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளார். நேற்று அடித்த இந்த சதத்தின் மூலமாக ஒரே வருடத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, டி20 இன்டர்நேஷ்னல் போட்டி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, ஐபிஎல் போட்டி என்று அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே வருடத்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மான் கில் படைத்துள்ளார்.