ஐபிஏல் தொடர் 2023! இன்று இரண்டு போட்டிகள்!!

Photo of author

By Sakthi

ஐபிஏல் தொடர் 2023! இன்று இரண்டு போட்டிகள்!
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்று மாலை நடக்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுகின்றது. இரவு நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றது.
இன்று மாலை நடக்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இந்த இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இன்று விளையாடவுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
மற்றொரு போட்டியில் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.