ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்? முதல் தகுதி சுற்று போட்டியில் குஜராத் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

0
123

15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தில் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், உள்ளிட்ட அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

சுற்று வாய்ப்பை இழந்த டெல்லி கேப்பிடல், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளி பட்டியலில் 5 முதல் 10 இடங்களை பெற்று இருக்கின்றன என தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது என்பதை நிர்ணயம் செய்யும் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் கல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

இதில் முதல் 2 இடங்களைப் பிடித்திருக்கின்ற குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் தோல்வி அடையும் அணி ஒரு வாய்ப்பு பெறும். அதாவது இந்த அணி வெளியேற்றம் சுற்றிலும் அணியை சந்திக்கும் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 2வது அணி இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

அறிமுக அணியான குஜராத் 14 லீக் ஆட்டங்களில் விளையாடி வெற்றி தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. அதோடு பிளேஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது.

அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சுப்மன் கில் டேவிட் மில்லர் விருத்திமான் சஹா ராகுல் திரிவேதி உள்ளிட்டோரும் பந்துவீச்சை பொறுத்தவரை ரஷித் கான் முகமது ஷமி பெர்குசன் அல்ஜாரி ஜோசப் உள்ளிட்டோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

ரசித்தான் பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கில் அதிரடி காட்டுவதும் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும் பங்களிப்பு வழங்குவதும் அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது அதோடு முகமது சமி பவர் பிளேயில் இதுவரையில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8வெற்றி 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 2வது இடத்தை தனதாக்கி இருக்கிறது.

அதே போல சுற்றி அடைந்திருக்கிறது. ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 3 சதம் 3 அரைசதம் உட்பட ஆறு 129 ரன்கள் எடுத்து இந்த சீசனில் ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கிறார்.

அதேபோல அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைபற்றி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

அதோடு. பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் ஜெய்ஸ்வாலும், பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, ட்ரெண்ட் பவுல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ஒபெட் மெக்காயும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஜோஸ் பட்லர் கடந்த 5 ஆட்டங்களில் அரை சதம் அடித்ததில்லை, குறிப்பாக 3 ஆட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ஜோஸ் பட்லர் கடந்த 5 ஆட்டங்களில் அரை சதம் அடித்ததில்லை.

குறிப்பாக 3 ஆட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அந்த அணியின் ஸ்கோர் வலுவான நிலையை எட்டுவதற்கு அவருடைய ஆட்டங்களிலும் பழைய நிலை தென் பட வேண்டிய அவசியம் தேவைப்படுகிறது.

தன்னுடைய நிலை தொடர்பாக ஜோஸ் பட்டிலர் கருத்து தெரிவிக்கும்போது இந்த போட்டி தொடரில் முதல் பாதியில் என்னுடைய ஆட்டம் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

சென்ற சில ஆட்டங்களில் எனக்கு லேசான ஏமாற்றம் அளித்தது. ஆனாலும் பிளே ஆப் சுற்றில் நன்றாக செயல்படமுடியும் என நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

ராஜஸ்தானுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதன் காரணமாக, அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்கும்.

அதேசமயம் தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு ராஜஸ்தான் அணி முயற்சி செய்யும் ஆகவே சமபலம் உள்ள இந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது எனவும் சொல்கிறார்கள்.

இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணி அளவில் ஆரம்பமாகும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Previous articleஅடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தப் பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Next articleவேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!….