இர்பானின் தொப்புள்கொடி அதிர்ச்சி வீடியோ! மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்!

irfan’s video issue:இர்பான் தனது குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை எற்படுத்தியதால் மருத்துவர் மீது புகார்.

இர்பான் ஏற்கனவே தனது மனைவி வயிற்றில் என்ன குழந்தை உள்ளது என  ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டதை சட்டப்படி தவறு என கூறி  அவர் மீது  வழக்கு போடப்பட்டது.  மேலும் அவர் தற்பொழுது தனது மனைவியின் பிரசவத்தின் போது மருத்துவமனையில் குழந்தையின் தொப்புள் கொடி அறுப்பது போன்ற வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால் அவர் மீது வழக்கு தொடர வேண்டும்  என மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியது.

இதனை மருத்துவர் எப்படி அனுமதித்தார் என மருத்துவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு அதற்கு மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சர் இதனை தவறு என கண்டித்து தவறு செய்தவர்களை இந்த அரசு காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இது போன்று நடந்தது தேசிய சட்ட விருதுகளை மீறியதற்கு சமம் என கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அது மட்டும் அல்லாமல் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இர்பான் மீது புகார் அளித்துள்ளது. கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது. ஏற்கனவே தனது குழந்தை என்ன பாலினம் என தெரிவித்தது பற்றிய விவகாரத்தில் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது ஆனால் அது துபாயில் பார்த்ததால் மன்னிப்பு கேட்ட பிறகு அதனை ஏற்றுக் கொண்டோம். ஆனால் இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் சுகாதார துறை விட மாட்டோம் என தெரிவித்து உள்ளது.