
ADMK: திமுக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி இதற்கு முன் அதிமுக அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பல பேரிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு அவர் திமுக அரசுக்கு மாறிய பிறகே விசாரணைக்கு வந்தது.
தற்போது புதிய திருப்பமாக அதிமுக ஆட்சியில் வேறு ஒரு ஊழலும் நடந்துள்ளது. அதுவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான எஸ். பி வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ள நிலையில், தஞ்சை, சிவகங்கை கோட்டங்களில், சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு திட்டங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில் ஆர்.ஆர். இன்பாரா நிறுவனம் ரூ. 655 கோடி மதிப்பில் 208 கிலோ மீட்டர் சாலை பணிகளுக்கான டெண்டரை பெற்றதில் முறை கேடு செய்தது தெரியவந்தது. 2022 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை தொடங்கிய நிலையில், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கே.பி.ஸி இன்ஜினியர்ஸ் மற்றும் ஜே.எஸ்.வி நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியுடன் தொடர்புடைய நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக ஆட்சியில், பல்வேறு ஒப்பந்த முறைகேடுகள் நடந்துள்ள நிலையில் அதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது. அப்படி இருக்க முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் தாமதமாக செயல்படுவது ஏன் என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
