ஒரு மாஸ்க் இவ்வளவு விலையா? வைரலாகும் ஏ.ஆர். ரகுமான்!

0
139
Is a mask so expensive? Viral A.R. Raghuman!
Is a mask so expensive? Viral A.R. Raghuman!

ஒரு மாஸ்க் இவ்வளவு விலையா? வைரலாகும் ஏ.ஆர். ரகுமான்!

கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து, பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு சில பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் அனைவரின் பேசும் பொருளாக மாறிய நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகனுமான ஏ.ஆர். அமீனும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை அமீன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பதை விடவும், அந்த புகைப்படத்தில் ரகுமானும் அவரது மகன் அமீனும் அணிந்திருக்கும் மாஸ்க் குறித்துதான் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் அணிந்திருக்கும் மாஸ்க் விலை எத்தனை ஆயிரம்?
மிரட்டுறீங்க தலைவரே! மாஸ்க் பயங்கரமா இருக்கு! என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பலரும் இந்த மாஸ்க் என்ன மாஸ்க் என்றும், அதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்றும், அதன் விலை எவ்வளவு என்றும் பல கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் அணிந்திருக்கும் மாஸ்க் விலை எத்தனை ஆயிரம்?
இதற்கும் ரகுமானின் ரசிகர்களே பதில் அளித்து வருகின்றனர். அது எல்.ஜி. நிறுவனத்தின் எல்ஜி ப்யூரிகேர் மாஸ்க் LG PuriCare™ Wearable Air Purifier என்றும், அதன் விலை 10ஆயிரத்துக்கு மேல் என்றும் சொல்லி வருகின்றனர். 99.99% பாக்டீரியா நீக்கம் செய்யப்படும் 99.99% முழுமையான காற்று சுத்திகரிப்பு இந்த மாஸ்க் என்கிறார்கள். இந்த மாஸ்க் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம் என்றும் கூறி இருக்கிறார்கள்.

கோரோனாவிலிருந்து தப்பிக்க வசதி படைத்தவர்கள் இந்த மாஸ்கை பயன்படுத்தலாம், வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்.

Previous articleநடிகர் மகத்துக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?
Next articleமௌன ராகம் கதாநாயகியின் பட்டையைக்கிளப்பும் கவர்ச்சி வீடியோ!