இந்தியா-சீனா மோதலில் டிரம்ப் அதரவு இந்தியாவிற்கு கிடைக்குமா?அமெரிக்கா முன்னாள் ஆலோசகரின் கருத்து

Photo of author

By Pavithra

இந்தியா-சீனா மோதலில் டிரம்ப் அதரவு இந்தியாவிற்கு கிடைக்குமா?அமெரிக்கா முன்னாள் ஆலோசகரின் கருத்து

Pavithra

Updated on:

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சில நாட்களாகவே எல்லைப் பிரச்சினைகள் நடந்து வரும் நிலையில் தற்போது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.இருப்பினும் இரு நாடுகளுக்கும் போர் வந்தால் அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய-சீன இடையிலான மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை என அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.

இதைப் பற்றி ஜான் போல்டன் கூறுகையில்,டொனால்டு டிரம்ப் எந்த வழியில் செல்வார் என்று எனக்குத் தெரியாது, அவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கவில்லை என்றும், சீனாவுடனான புவிசார் மூலோபாய உறவை அவர் வர்த்தகத்தின் மூலமாக மட்டுமே பார்க்கிறார் என்றும் அவர் கூறினார்.


வர்த்தகம் முக்கியமானது, ஏனென்றால் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடமிருந்து அறிவுசார் சொத்துக்களை சீனா திருடியது,பல தசாப்தங்களாக பலமான தொழில்நுட்ப இடமாற்றங்களில் ஈடுபட்டுள்ளது, அது அவர்களின் பொருளாதார வெற்றியின் முக்கிய பகுதியாகும்.

வரும் நவம்பர் மாதம் தேர்தலுக்குப் பிறகு  டிரம்ப் என்ன செய்வார் என்று தெரியாத நிலையில், உய்குர்களை வதை முகாம்களில் அடைத்ததற்காக அல்லது ஹாங்காங்கை அடக்குவதற்காக அவர் சீனாவை விமர்சிக்க மாட்டார் என ஜான் போல்டன் கூறினார்.

இந்த நேரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல் அதிகரித்தால்,டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை? என அவர் கருத்து தெரிவித்தார்.