ஆப்கனின் விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சியா? அமெரிக்க தூதர் சொல்லும் குற்றச்சாட்டு!
ஆப்கானிஸ்தானின் விமானப்படைத் தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்துவதாகவும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி குற்றம்சாட்டி உள்ளார். ஐ.நா சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் தான் நிக்கி ஹாலி என்பவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற சிறப்பைப் பெற்றவர். தலை சிறந்த நிர்வாகியும் கூட ஆவார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தற்போது கைப்பற்றியதை அடுத்து, இவர் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் டெலிவிஷனுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது பேசிய அவர் ஜோ பைடனின் நிர்வாகம் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தனது முக்கிய நட்பு நாடுகளை அணுகி அவர்களது ஆதரவைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். முதலில் செய்ய வேண்டியது நமது கூட்டாளிகளுடன் அது தைவானாக இருந்தாலும், உக்ரைனாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும், ஜப்பானாக இருந்தாலும் அவர்களுடைய முதுகெலும்பாக இருப்போம் என மன உறுதி அளிக்க வேண்டும்.
நமக்கு இவர்களின் தேவையும் உள்ளது. இரண்டாவது உலகமெங்கும் நாம் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை மேற்கொள்ளும் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த தார்மீக வெற்றியால் போராளிகள் மிகப்பெரிய அளவில் தங்களுக்கு கூட்டாக ஆள் சேர்ப்பார்கள். அதை நாம் கண் கூடாக பார்க்க முடியும். நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம் என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
நமது இணையதள பாதுகாப்பு பத்திரமாக இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்தும் நம் நாட்டு தளங்களில் ஊடுருவி வருகிறார்கள். நாம் மீண்டும் போராட தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சீனாவை பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிதன் காரணமாக இந்த தருணத்தில் சீனாவை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள விமானப்படைத் தளத்தை சீனா கைப்பற்ற தொடர்ந்து முயற்சி செய்கிறது. இந்த விமானப்படை தளம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. சீனா ஆப்கானிஸ்தானின் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெறவும் முயற்சிக்கிறது.
நமக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே ஜோ பைடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயம் இதுதான். நமது கூட்டாளிகளை வலுப்படுத்துவதாக அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். நமது ராணுவத்தை நவீனப்படுத்தவும் சைபர் குற்றங்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்கிறோம், என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.