லால் சலாம் படத்தில் ரஜினிக்கு பதில் இவரா!! வெளியான நியூ அப்டேட்!!

0
112
Is he the answer to Rajini in Lal Salaam!! New update released!!
Is he the answer to Rajini in Lal Salaam!! New update released!!
லால் சலாம் படத்தில் ரஜினிக்கு பதில் இவரா!! வெளியான நியூ அப்டேட்!!
நடிகர்கள் விஷ்ணு விஷால் விக்ராந்த் இணைந்து நடிக்கும் திரைப்படமான லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பதிலாக நடிக்கவிருந்த நடிகர் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
லால் சலாம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் காட்சிகள் சுமார் 20 நிமிடங்களுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தற்பொழுது மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பதிலாக நடிக்கவிருந்த நடிகர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பதிலாக நடிக்கவிருந்தவர் நடிகர் மம்மூட்டி என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் மோகன் லால் அவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிருந்தாராம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கதை பிடித்திருந்ததால் அவரே இதில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது