
ADMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் புதிய புதிய திருப்பத்தை நோக்கி சுழன்று கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய நிலையில், அவரின் கரூர் பிரச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் விவகாரம் பற்றிய பேச்சுகள் தற்போது முடங்கிய நிலையில், புதிதாக நால்வர் கூட்டணி உருவாகியுள்ளது.
பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன். டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோர் கூட்டாக வந்து விழாவில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பின்னர் இவர்கள் செய்தியாளர்களை சந்தித்து, மீண்டும் அம்மா ஆட்சியை அமைப்போம், துரோகம் வீழ்த்தப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, இவர்கள் கூட்டணியின் பின்னால் நான் இருப்பதாக சிலர் பேசி கொள்கிறார்கள். அதிமுகவிலிருக்கும் சிலர் என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். இதனால் இவர்கள் கூட்டணியின் பின்புலத்தில் இருக்கும் கருப்பு ஆடு அண்ணாமலை என்ற வதந்தியும் பரவி வருகிறது.
ஏனென்றால் இவர்கள் நால்வரும் இபிஎஸ்க்கு எதிராக செயல்படுவது எல்லோருக்கும் தெரியும். அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இபிஎஸ். இதனால் இவர்கள் நால்வரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக செயல்படுவதற்கு அண்ணாமலையும் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதிமுகவிலிருக்கும் சிலர் என்னை திட்டுகிறார்கள் என்று அண்ணாமலை கூறியது அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவர் இவ்வாறு கூறியது எடப்பாடி பழனிசாமியை தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
