மறுபடியும் தொடங்கப்படுகிறதா? இம்சை அரசன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம்!

Photo of author

By Sakthi

வைகைப்புயல் வடிவேலு கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை படைத்த திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த திரைப்படத்தின் 2வது பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பழைய திரைப்படத்தின் அதே கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாக இருந்தது அதோடு இந்த கூட்டணியுடன் லைக்கா நிறுவனமும் சேர்ந்துகொண்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே ஒரு சில பிரச்சனைகள் ஏறத் தொடங்கியது இதன் காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக, நடிகர் வடிவேலுவிடம் நஷ்ட ஈடு கேட்டு திரை படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் சங்கர் பட அதிபர் சங்கத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் பல வருடங்களாக வடிவேலு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், நடிகர் வடிவேலு இயக்குனர் சங்கர் இடையே ஏற்பட்டிருக்கின்ற மோதலை தீர்த்துவைக்க மறுபடியும் சமரச பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின என்று சொல்லப்படுகிறது.

நடிகர் வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் வழியாக படிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.