வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்தது குற்றமா!!? இந்த காரணத்திற்காக நான்கு பேரை வெட்டிய தந்தை மற்றும் மகன் கைது!!! 

0
98

வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்தது குற்றமா!!? இந்த காரணத்திற்காக நான்கு பேரை வெட்டிய தந்தை மற்றும் மகன் கைது!!!

வீட்டின் மீது தென்னை மட்டை விழுந்த காரணத்திற்காக நான்கு பேரை அரிவாளை கொண்டு தந்தை மற்றும் மகன் இருவரும் சேர்ந்து வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கொடும்பப்பட்டி பகுதியில் நகம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார், சிவக்குமார், ராமசாமி என்று மூன்று மகன்கள் உள்ளனர்.

இதில் செந்தில்குமார் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் தென்னை மரத்தின் மட்டைகள் அதே பகுதியில் வசித்து வரும் செல்வம் என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதனால் செல்வமும் அவருடைய மகன் தினேஷ் இரண்டு பேரும் சேர்ந்து செந்தில்குமார் அவர்களிடம் தகறாறு செய்துள்ளனர்.

இதையடுத்து செந்தில்குமார் வீட்டில் இல்லாத பொழுது செல்வமும் அவருடைய மகன் தினேஷ் இருவரும் சேர்ந்து தென்னை மரத்தை வெட்டியுள்ளனர். அதை பார்த்த செந்தில்குமார் அவர்களின் மூத்த சகோதரர்கள் ராமசாமி, சிவக்குமார் மற்றும் தாயார் நாகம்மாள் ஆகிய மூன்று பேரும் செல்வம் மற்றும் தினேஷ் அவர்களிடம் எதற்காக வெட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த தந்தை செல்வம் மற்றும் மகன் தினேஷ் இருவரும் சேர்ந்து சிவக்குமார், ராமசாமி, நாகம்மாள், தனம் ஆகிய நான்கு பேரின் முகத்திலும் மிளகாய்ப் பொடியை தூவியுள்ளனர். அதன் பின்னர் அரிவாளால் வெட்டி கம்பியால் தாக்கி விட்டு செல்வமும், தினேஷும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ராமசாமி, சிவக்குமார், நாகம்மாள், தனம் ஆகிய நான்கு பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவர்கள் நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தந்தை செல்வம் மற்றும் மகன் தினேஷ் இருவரையும் கைது செய்தனர். தென்னை மட்டை வீட்டின் மீது விழுந்த காரணத்திற்காக நான்கு பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Previous articleதமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!! இந்த மாவட்டங்களின் பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!!
Next articleகேளுங்க மக்களே.. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 28 நாட்கள் மட்டுமே அவகாசம்!!