நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் உள்ள திரி முழுமையாக எரிந்து கருகினால் நல்லதா!! கெட்டதா!!

Photo of author

By Janani

நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் உள்ள திரி முழுமையாக எரிந்து கருகினால் நல்லதா!! கெட்டதா!!

Janani

Is it better if the wick in the lamp that we can light burns completely!! Bad!!

நாம் நமது வீடுகளிலும் கோவில்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்பான முறையாகும். நமது வீடுகளில் தினமும் விளக்கினை ஏற்றாவிட்டாலும் கூட செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகம் விளக்கினை ஏற்றி வழிபடுவோம். அவ்வாறு நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் போடக்கூடிய திரியானது முழுமையாக எரிந்து கருகிவிட்டால் அது நமது குடும்பத்திற்கு நல்லதா! அல்லது ஏதேனும் ஒரு ஆபத்து ஏற்படுமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அவ்வாறு கருகினால் அதற்கான அர்த்தம் என்ன என்பது குறித்து காண்போம்.
அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் தீபம் தான் நமது வீட்டில் உள்ள இருளைப் போக்கி வெளிச்சத்தை தரக்கூடிய ஒன்று. அதேபோன்றுதான் தீபம் ஏற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். நமது வீடுகளில் தீபம் ஏற்றுவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் பரவும். எனவே தான் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது அனைவரது வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு பங்காக கருதப்படுகிறது.
நமது விளக்கில் ஊற்றக்கூடிய எண்ணையும், திரியும் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் ஏற்றக்கூடிய தீபத்தினை ஒருபோதும் வாயினால் ஊதி அணைக்க கூடாது. அவ்வாறு ஊதி தீபத்தினை அணைத்தால் நமது வீடுகளில் தரித்திரம் வந்து குடியேறும் என்பது சாஸ்திரத்தின் கருத்து. அவ்வாறு வாயினால் ஊதி தீபத்தினை அணைப்பது இறைவனை அவமதிப்பதற்கு சமமாகவும் கருதப்படுகிறது.
அதேபோன்று தீபத்தில் நாம் ஊற்றக்கூடிய எண்ணையானது நல்லெண்ணெய் மற்றும் நெய்யினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பஞ்சலோக எண்ணெயினை நமது வீடுகளில் ஏற்றக்கூடிய தீபத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஆனால் கோவில்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். வீடுகளில் பஞ்சலோக எண்ணெயை அதாவது ஒரு எண்ணையுடன் மற்றொரு எண்ணையை கலந்து பயன்படுத்தி தீபத்தினை ஏற்றினால் நமது வீடுகளில் வறுமை ஏற்படும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
இன்றைய நவீன காலத்தில் தீபத்தில் ஊற்றக்கூடிய எண்ணெயில் பல வகைகள் இருந்தாலும் கூட, நமது முன்னோர்கள் காட்டிய நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் சிறந்த வழிபாட்டு முறையாக அமையும். அடுத்து முக்கியமான ஒன்றாக கருதப்படுவது விளக்கில் போடக்கூடிய திரி. நாம் பொதுவாகவே பஞ்சினால் செய்யப்பட்ட திரியை தான் பயன்படுத்தி வருவோம். அவ்வாறு பயன்படுத்துவது சகல சௌபாக்கியங்களையும் நமக்கு தரும்.
அவ்வாறு திரியை போட்டு விளக்கு ஏற்றும் பொழுது விளக்கில் ஊற்றப்பட்ட எண்ணெய் தீர்ந்தவுடன் திரியும் எரிந்து கரியாக தொடங்கி விடும். ஆனால் அவ்வாறு விடக்கூடாது. எண்ணெய் தீர்ந்த உடனேயே நாம் கவனமாக இருந்து ஒரு பூவினை வைத்து அந்த விளக்கினை அணைத்து விட வேண்டும். திரியை கருக விடக்கூடாது.
திரியை கருக விட்டால் பணவரவானது தடுக்கப்படும். நமது கவனக்குறைவினால் ஏதேனும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் திரியானது கருகலாம். ஆனால் தொடர்ந்து அவ்வாறு விடக்கூடாது. இதனால் வீட்டில் தேவையில்லாத சங்கடங்கள் உருவாகலாம். அதேபோன்று அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் மன நிம்மதி மற்றும் அமைதி ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகவும் கூடும்.
அதேபோன்று விளக்கினை ஏற்றுகிறோம் என்றால் அந்த விளக்கு தானாக அணையும் முன்னரே பூவினை வைத்து நாம் விளக்கினை குளிர்வித்து விட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய திரியினை அடுத்த முறை பயன்படுத்தக்கூடாது. அந்த திரி நன்றாகவே இருந்தாலும் கூட அடுத்த முறை பயன்படுத்தாமல் புதிய திரியை போட்டு தான் விளக்கினை ஏற்ற வேண்டும். இது தேவையில்லாத விரைய செலவுகளை ஏற்படுத்தி விடும்.
ஒரு வாரம் பயன்படுத்திய விளக்கினை அடுத்த வாரம் நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னரே அடுத்த வாரத்திற்கான தீபத்தினை போட வேண்டும். விளக்கில் ஏற்கனவே ஊற்றிய பழைய எண்ணைய் இருக்கும் பொழுது புதிய எண்ணையை ஊற்றி பயன்படுத்தக்கூடாது. எனவே விளக்கினை நன்றாக சுத்தம் செய்த பின்னரே அடுத்த தீபத்தினை ஏற்ற வேண்டும். அந்த பழைய எண்ணையானது பச்சை நிறமாக மாறி இருக்கும். அவ்வாறு இருக்கையில் அதனை தொடர்ந்து பயன்படுத்தினால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும்.