மீண்டும் மூக்குத்தி அம்மனாக களமிறங்கும் நயன்தாரா? இயக்குநர் யார் என்று தெரியுமா?
நடிகை நயன்தாரா நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
நடிகரும் இயக்குனருமான ஆர்கே பாலாஜி அவர்களின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் படத்தை இயக்கிய ஆர்.ஜே பாலாஜி அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், ஊர்வசி, அஜய் கோஷ் உள்பட பலபேர் நடித்திருந்தனர். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக சில ஆண்டுகளாக கூறி வந்தார். ஆனால் மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க நயன்தாரா அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதிக சம்பளம் கேட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிகை திரிஷா அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. இதற்கு மத்தியில் தற்பொழுது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
தற்பொழுது வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பில் இருந்து நடிகை நயன்தாரா மீண்டும் அம்மனாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்ததில் நடிப்பது உறுதியாகி இருக்கின்றது. மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் அவர்களே தயாரிக்கின்றார். அவருடன் இணைந்து நடிகை நயன்தாரா அவர்களும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை தயாரிக்கின்றார்.
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் இரண்டு கதாப்பாத்திரங்களில் அதாவது அம்மனாகவும் பக்தையாகவும் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குநர் குறித்த தகவல்களோ மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களோ எதுவும் வெளியாகவில்லை.