திரும்பவும் அதையேவா? பேரதிர்ச்சியில் மக்கள்! இப்படியும் ஒரு அவலம்!

Photo of author

By Hasini

திரும்பவும் அதையேவா? பேரதிர்ச்சியில் மக்கள்! இப்படியும் ஒரு அவலம்!

கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதிலும் மாபெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.அரசுகள் பல திட்டங்களை முன் வைத்தும், செயல்படுத்தியும் வருகிறது.

தற்போதுவரை கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் அனைவரும் இரண்டு மாஸ்க் பயன்படுத்தவும், வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப் படுகிறார்கள்.

அதே நேரத்தில் சிலர் பொறுப்பில்லாமல் தூக்கி எறியும் மாஸ்க்கினால் பலருக்கு நோய் தொற்றும் அபாய அவலங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில், பயன்படுத்திய மாஸ்க், கையுறைகள், மற்றும் பி.பி.இ. கிட் போன்றவற்றை கழுவி மீண்டும் விற்பதாக கூறிய வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில், சட்னா மாவட்டத்தில், உள்ள பர்கேடா கிராமத்தில் சிலர் உபயோகித்து குப்பையில் எறியும் பொருட்களை மீண்டும் விற்பனை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாவட்ட ஆட்சியர், இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், உபயோகப்படுத்திய பொருட்களை மக்கள் கைகளில் கிடைக்காத வண்ணம், பொது வெளியில் கொட்டாமல் தடுக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.