உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??

Photo of author

By Janani

உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??

Janani

நமது சமூகம் என்பது பல மூடநம்பிக்கைகளால் நிறைந்த ஒன்று என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் நம்மை சுற்றி பலவிதமான மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நம்பிக்கைகள் நமது மக்களிடையே பல நூற்றாண்டு காலமாக பரவி வருகிறது. எனினும் இப்பொழுது தான் ஓரளவிற்கு நமது சமூகத்தில் மூடநம்பிக்கைகளின் ஆதிக்கம் சற்று குறைந்து உள்ளது.

முழுமையாக இந்த மூடநம்பிக்கை குறைந்து விட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். நமது மக்களிடையே பரவி இருக்கும் பெரும்பாலான மூடநம்பிக்கை என்றால் அது பணம் சம்பந்தமான ஒன்றாக தான் இருக்கும்.

காலை எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்? எதை பார்க்க வேண்டும்? எந்த கடவுளை வணங்க வேண்டும்? கண்கள் துடித்தால் என்ன பலன்? என்பது குறித்த பலவிதமான மூடநம்பிக்கைகள் பரவி வருகிறது. அவற்றுள் ஒன்றான நமது உள்ளங்கை அரித்தால் பணம் ஆனது நமது கைத்தேடி வரும் என்று கூறுவது உண்மையா? அதற்கு பின் இருக்கும் காரணம் என்ன? என்பது குறித்து தான் தற்போது காணப் போகிறோம்.

இன்று நமது சமூகத்தில் நிலவக்கூடிய மூடநம்பிக்கைகளில் முக்கியமான ஒன்று, நாம் வெளியில் செல்லும் பொழுது பூனை குறுக்கே வந்தால் அது கெட்ட சகுனம். இது மட்டும் அல்லாமல் காலையில் பால்காரரை காண்பது நல்லது, யாராவது நம்மை நினைத்தால் விக்கல் வரும், விதவையை பார்த்தால் கெட்ட சகுனம் இது போன்ற பலவிதமான மூடநம்பிக்கைகள் நம்மை சுற்றி இன்றும் உள்ளது.

அதேபோன்று இந்த மூடநம்பிக்கைகளுள் முக்கியமான ஒன்றாக நமது இடது உள்ளங்கை அரித்தால் பண நஷ்டம் ஏற்படும் என்றும் கூறி வருகின்றனர். அதற்கான விளக்கத்தை தற்போது காணலாம்.
பொதுவாக உள்ளங்கை அரித்தால் உடனே நாம் பலவிதமான யோசனைகளுக்கு சென்று விடுவோம். அதாவது இது நல்லதா? அல்லது கெட்டதா? என்பதை குறித்து.

வலது உள்ளங்கை, இடது உள்ளங்கை என கைகள் அரிப்பதற்கு பல விளக்கங்களை நமது மக்கள் கூறுவர். இடது உள்ளங்கை அரித்தால் லட்சுமிதேவி நமது கையை விட்டு செல்ல போகிறார் என்று கூறுவர்.
இடது உள்ளங்கை அரித்தால் திடீர் செலவு, பணம் திருடு போவது இது போன்ற காரணங்களையும் கூறுவர்.

ஆனால் வலது உள்ளங்கை அரித்தால் அதனை நல்ல சகுனம் என்று மக்கள் கூறுவர். இதனால் வலது உள்ளங்கை அரிக்கும் பொழுது சந்தோசமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
அதாவது வலது உள்ளங்கை அரித்தால் லட்சுமிதேவி நமது கைத்தேடி வரப்போகிறார். ஏதேனும் ஒரு வகையில் பணமானது நமக்கு கிடைக்கப் போகிறது என்று கூறுவர். இந்த உள்ளங்கை அரிப்பதில் ஆண்களுக்கு ஒரு சகுனம், பெண்களுக்கு ஒரு சகுனம் எனவும் மக்கள் கூறுவர்.

நமது உள்ளங்கை அரிப்பதற்கும் மக்கள் கூறும் நல்லது கெட்டது என்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நமது உடம்பில் ஆற்றல்கள் பரவுவதால் மட்டுமே அரிப்பு என்பது ஏற்படும். நமது உடம்பில் இடது பக்கத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அது நமக்கு ஒரு விதமான பயத்தையே ஏற்படுத்தும்.
நமது உள்ளங்கை அரித்தால் அதனை சொரிந்து கொண்டே இருப்பதை விட, உப்பு கலந்த நீரில் கைகளை கழுவினால் சிறிது நேரத்தில் அரிப்பு சரியாகிவிடும்.

அதேபோன்று நமது உள்ளங்கை அரிக்கும் பொழுது ஏதேனும் ஒரு மரக்கட்டைகளில் நமது கைகளை தேய்க்கலாம்.அவ்வாறு தேய்க்கும் பொழுது நமது உடம்பில் உள்ள தேவையற்ற ஆற்றல்கள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறிவிடும். நமது பழங்கால சடங்குகளுள் இதுவும் ஒன்று.