கிருஷ்ண ஜெயந்தி நாளையா ? அல்லது ஆவணி மாதமா? முழுமையான விளக்கம்!

0
135

விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக அவதாரமெடுத்த நாளை,நாம் கோகுலாஷ்டமி,கிருஷ்ண ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.”விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ” அவதாரம் எடுத்தார்.திதியை வைத்து பார்க்கையில் தென்னிந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம்,பத்தாம் தேதி தான் வருகின்றது.ஆனால் அந்த தேதியானது அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் காலை 11.20 மணி வரை மட்டுமே.இதனை ஸ்ரீ ஜெயந்தி என்று அழைக்கப்படுகின்றது.அந்த நாளான்றும் நாம் கிருஷ்ண பகவானை வழிபடுவது மிகவும் சிறந்ததாகும்.

நாளை அதாவது ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆடி மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுகின்ற இந்த நாளை வடமாநிலத்தவர் அதிகமானோர் கிருஷ்ண பகவானுக்கு விரதமிருந்து கோகுலாஷ்டமியை
கொண்டாடுவர்.
நாளை காலை 7.56 முதல் மறுநாள் காலை 9.36 வரை அஷ்டமி திதி உள்ளது.
கிருஷ்ண பகவானை வழிபட காலை 10.35 முதல் 11.30 வரையும், மாலை 6 மணிக்கு மேல் கிருஷ்ணாபரமானை
வழிபடலாம்.

ஆனால் இரண்டு நாட்களுமே கிருஷ்ணனுக்கு மிகவும் உகந்த நாட்களாகும்.செப்டம்பர் மாதம் வரும் அஷ்டயானது கிருஷ்ணன் பிறந்த ரோகிணி நட்சத்திரத்தில் வருவதால்,தென்னிந்தியர் பெரும்பாலும் இந்த நாளிலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகின்றனர். ஜென்மாஸ்டமியான ஆடி மாதத்தில் வரக்கூடிய கோகுலாஷ்டமியை வட மாநிலத்தவர் கொண்டாடுவதால் தென்னிந்தியர்களும் சிலர் இந்த நாளிலேயே கோகுலாஷ்டமியாக கொண்டாடுகின்றனர்.இதில் நாம் எந்த நாளை கொண்டாட வேண்டும் என்பதனை நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

Previous articleகொரோனா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
Next articleசுற்றசுழல் ஆய்வாளர்கள் கவலை