மூடப்படும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்? அதிர்ச்சியில் பாட்டாளி மக்கள்!

Photo of author

By Sakthi

தற்போது தமிழகத்தில் இருக்கின்ற பல அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் அவரவர் கொள்கையை பரப்புவதற்காக தங்களுக்கு என்று ஒரு தொலைக்காட்சி சேனலை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலமாக தங்களுடைய கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில், திமுகவை எடுத்துக் கொண்டால் அந்த கட்சிக்கு பல தொலைக்காட்சிகள் இருக்கின்றன. அது போதாதென்று தற்போது தமிழகத்தில் அந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் பல பொது ஊடகங்களும், அந்த கட்சியை தூக்கிப் பிடித்து வருகின்றன.

இது அந்த கட்சி ஆளும் தரப்பாக வருவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் பல செய்தி ஊடகங்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நடத்தப்படும் ஒரே தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சி கடந்த 2006 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த தொலைக்காட்சியின் நிறுவனர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். மக்கள் தொலைக்காட்சி தோன்றிய பிறகு அது தொலைக்காட்சிகள் இடையே ஒரு தனி கவனத்தை பெற்றது.

ஏனெனில் மற்ற தொலைக்காட்சியைப் போல அல்லாமல் மக்கள் உண்மையில் பயன் தரக்கூடிய பல விஷயங்களை அதில் புகுத்தி இருந்தது மக்கள் தொலைக்காட்சி. மேலும் அங்கே வேலை பார்க்கும் பணியாளர்கள் கூட சரியான தமிழர் பாரம்பரிய உடைய அணிந்திருந்தார்கள்.

மேலும் ஆங்கிலக் களப்பு இல்லாத ஒரே தொலைக்காட்சி என்ற பெருமையும் அந்த தொலைக்காட்சி பெற்றிருந்தது. இந்த தொலைக்காட்சி ஆரம்பமாகி 16 வருடங்கள் ஆன நிலையில் வரும் 31ஆம் தேதியுடன் இந்த தொலைக்காட்சி மூடப்படுவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ஆனால் இந்த தொலைக்காட்சி மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக செயல்பட்டு வரும் ஒரே தொலைக்காட்சி என்று சொல்லப்படுகிறது என்ற பெயரில் ஆதரவாக இருக்கும் ஒரே சேனல் இந்த மக்கள் தொலைக்காட்சி மட்டுமே.

ஆனால் தற்போது இந்த சேனல் மூடப்படுவதாக வெளியாகி இருக்கின்ற தகவல் காரணமாக, அங்கே பணிபுரியும் பணியாளர்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எல்லோருக்கும் தொழிலாளர் நலச்சட்டப்படி செட்டில்மெண்ட் வழங்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நிறுவனத்தின் கூட்டம் நடைபெற்ற சூழ்நிலையில் ஊதிய உயர்வு என பணியாளர்கள் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த அதிர்ச்சி தகவலை அவர்களுக்கு நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருந்தாலும் அந்த தொலைக்காட்சி மூடப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அந்த கட்சியின் கொள்கையை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரே ஊடகமாக இருந்து வருவது இந்த தொலைக்காட்சி மட்டும் தான். ஆகவே இந்த தொலைக்காட்சியை மூடும் முடிவை அதன் நிர்வாகம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்று சொல்லப்படுகிறது.