பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா!!? அப்போ ஏன் முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுகிறார்!!? நடிகை குஷ்பு எழுப்பிய கேள்வி!!
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுகிறார் என்று கூறியதற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அவர்களை வருககன்ற நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்த இந்தியா கூட்டணியின் முதல் கட்ட பொதுக்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட பொதுக்குழு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் நடைபெற்று வந்தது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுகிறார் என்று பேசினார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு அவர்கள் “பிரதமர் மோடி பயப்படுகிறாரா. அப்போ ஏன் நீங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சுட்டிக்காட்ட பயப்படுகிறீர்கள்?” என்று நடிகை குஷ்பு அவர்கள் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நடிகையும் பாஜக தேசியக்குழு உறுப்பினருமான குஷ்பு அவர்கள் “எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாகி உள்ள இந்தியா கூட்டணியை காமெடிக் கூட்டமாக பார்க்கிறேன். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும்.
அந்த ஆசையில் தப்பு கிடையாது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று 26 பேர் ஒன்று சேர்ந்து உள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனிஒருவராக நிற்கிறார். முடிந்தால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தனியாக எதிர்த்து நின்று வெற்றி பெறுங்கள். எங்களுக்குத் தொரியும் அடுத்த முறையும் நரேந்திர மோடி அவர்கள்தான் பிரதமர் என்று.
உங்கள் 26 பேர்களில் யார் பிரதமர் வேட்பாளர்? ராகுல் காந்தியா? சரத்பவரா? மம்தா பானர்ஜி அவர்களா? நிதிஷ்குமாரா? அகிலேஷா இல்லை முக.ஸ்டாலினா? சொல்லுங்கள்.
இந்த ஆண்டின் மிகப் பெரிய காமெடி என்ன என்றால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுகிறார் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியது தான்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயப்படுதிறாரா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவர்தான் என்று கூறுவதற்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு என்ன பயம்? கடந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி அவர்கள்தான் என்று வெளிப்படையாக முக ஸ்டாலின் அவர்கள் கூறினார். ஆனால் இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சொல்ல ஏன் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தயக்கம் காட்டுகிறார். தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயம் இருக்கிறதா? அல்லது மற்ற கட்சிகள் ஏற்றுக் கொள்ளாது என்ற பயமா? அல்லது மக்கள் ஏற்கமாட்டார்கள் ஏன்ற பயம் இருக்கிறதா?
ராகுல் காந்தி அவர்கள் அமேதியில் மீண்டும் போட்டியிடட்டும். ஸ்மிருதி ராணி தோற்கடிக்கப்படுவார் என்று சொல்லட்டுமே. புதிய கூட்டணியாக உள்ள இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிந்து கொள்வதில் எனக்கும் ஆசை இருக்கின்றது.
இந்திய நாட்டில் 10 பேர்களில் 8 பேர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்திய நாட்டை சீர்திருத்த உலக அளவில் உயர்த்தி வருவதை எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி விரும்பாமல் இருக்கலாம். ஆனால் இந்தியர்கள் விரும்புகிறார்கள்.
தனது சீர்திருத்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை விவாதத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் கொண்டுவந்துள்ளார்.
இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை முன்பு நம் இந்திய நாட்டில் இருந்த ஒன்றுதான். அப்பொழுது இந்த.கட்சிகள் தான் ஆதரவு அளித்தது. ஆனால் தற்பொழுது எதிர்ப்பது எதற்கு என்று தெரியுமா? இஷ்டத்துக்கு பணத்தை கொட்ட முடியாது என்பதும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது என்பதால் தான்.