90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

0
291
#image_title

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

1997 யில் தொடங்கப்பட்டது தான்  90s கிட்ஸ்களின் சக்திமான் சூப்பர்ஹிட் தொடராகும். சக்திமான் என்பது இந்திய ஹிந்தி மொழி சூப்பர் ஹீரோ தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த தொடர் தமிழில் டிடி பொதிகை சேனலில்  ஒளிபரப்பப்பட்டது.

இத்தொடர் 90s காலக்கட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்த தொடரில் முகேஷ் கண்ணா மட்டுமின்றி வைஷ்ணவி ,மஹந்த், சுந்திர பால் போன்ற நடிகர்களும் நடித்துள்ளார் . மேலும்  சக்திமான் தொடர்  முகேஷ் கண்ணா தயாரிப்பிலும் டீங்கர் ஜானி இயக்கத்திலும் வெளிவந்தது.

இத்தொடர் குழந்தைகளிடம்  அதிகமாக ஈர்ப்பைப்பெற்றது . இதில் இந்த  தொடரில்  முகேஷ் கண்ணா சக்திமானாக நடித்திருந்தார். நல்ல வரவேற்புபெற்ற இந்தத்தொடர் தற்போது படமாக எடுக்க முடிவு செய்திருந்தார்கள். தற்போது அந்த தொடரின் படபிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படம் 200 கோடி முதல்  300 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் சர்வதேச தரத்தில்  சினிமாவாக எடுக்கப்படும் என்று முகேஷ் கண்ணா கூறியுள்ளார். இந்நிலையில் படத்தின் ஹீரோவாக ரன்வீர் சிங்கை சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Previous articleஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!
Next articleவீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் !