ஓட்டுனர் உரிமம் வாகன உரிமம் காலாவதி ஆகிறதா:? இனி கவலை வேண்டாம்! அரசு விதிக்கப்பட்ட உங்களுக்கான சலுகை!
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமம் போன்ற சாலைப் போக்குவரத்தை சேர்ந்த உரிமங்கள் காலாவதியாகி விட்டால் அதனை ஆர்டிஓ அலுவலகம் சென்று புதுப்பிக்க வேண்டும்.தற்போது கொரோனா காலத்தில் இந்த உரிமங்களை புதுப்பிப்பதற்காக ஆர்டிஓ(RTO) அலுவலகத்தில் கூட்டம் கூடுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் வாகன உரிமங்களை புதுப்பிப்பதற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வாகன உரிமங்கள் காலாவதி ஆகி விட்டாலும்,அந்த உரிமங்களை வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம், என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலாவதியான உரிமங்களை வைத்து டிசம்பர் 31-ஆம் தேதி வரை இனி உங்கள் வாகனத்தை இயக்கிக் கொள்ளலாம்.